சூப்பர் ஹீரோ... என் மரியாதைக்குரிய நண்பா... - அமிதாப் பச்சன் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து...!

Rajinikanth Birthday Amitabh Bachchan
By Nandhini Oct 11, 2022 06:01 AM GMT
Report

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் பிறந்தநாளுக்கு தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன் பிறந்தநாள்

பாலிவுட் சூப்பர் ஸ்டராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் தன் சினிமா வாழ்க்கையில் பல சிறப்பு விருதுகள் பெற்றுள்ளார். அதில் 3 தேசியத் திரைப்பட விருதுகள், 12 பிலிம்பேர் விருதுகள் போன்றவை அடங்கும். அதிலும் பிலிம்பேர் விருதுகளில், சிறந்த நடிகர் என்ற தேர்வுகளில் அதிக பட்ச எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும், முக்கிய பிரமுகர்களும் அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

rajinikanth-amitabh-bachchan-birthday

ரஜினிகாந்த் வாழ்த்து

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் 80-வது பிறந்தநாளையொட்டி, தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எப்போதும் என்னை ஊக்கப்படுத்திய ஒருவர். நமது புகழ்பெற்ற இந்திய திரைப்பட சகோதரத்துவத்தின் ஒரு உண்மையான உணர்வு மற்றும் சூப்பர் ஹீரோ 80ல் நுழைகிறார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பான மற்றும் மிகவும் மரியாதைக்குரிய அமிதாப் ஜி.. என்னுடைய நிறைய அன்பும், வாழ்த்துக்களும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த டுவிட் பதிவை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.