நடிகர் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ஐஸ்வர்யா ராய் - வைரலாகும் வீடியோ

Rajinikanth Aishwarya Rai Viral Video Ponniyin Selvan: I
By Nandhini Sep 07, 2022 09:29 AM GMT
Report

நேற்று நடைபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஐஸ்வர்யா ராய் ஆசீர்வாதம் வாங்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ படம்

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் அடுத்தடுத்து வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்காக பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு, நட்சத்திரங்களின் வருகையால் இந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டது. படக்குழுவினருடன் இணைந்து பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் காலில் விழுந்த ஐஸ்வர்யா ராய்

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தபோது, அவர் காலில் விழுந்து நடிகை ஐஸ்வர்யா ராய் ஆசீர்வாதம் வாங்கினார். அதன் பின் நடிகர் விக்ரம், நடிகை த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் ஆசீர்வாதம் பெற்றனர்.

தற்போது இது குறித்த வீடியோவை நடிகர் ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

rajinikanth-aishwarya-raj-viral-video