ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படம் - திடீரென விலகிய பிரபலம் - ஷாக்கான ரசிகர்கள்...!
தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்து
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து வந்தார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வந்தனர்.
ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படம்
இதனையடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் படங்களை இயக்க வந்துவிட்டார்.
இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘லால் சலாம்’ படத்தை ஐஸ்வர்யா இயக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர். லால் சலாம் படத்தின் ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா ராமசாமியும் கலந்து கொண்டார்.
விலகிய பிரபலம்
இந்நிலையில், இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக ஆடை வடிமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நான் லால் சலாம் படத்தில் வேலை செய்யப் போவது இல்லை.
எதிர்காலத்தில் அனைத்து போஸ்டர்களிலிருந்து என் பெயரை நீக்குமாறு லைகா நிறுவனம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்களும், ஐஸ்வர்யாவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தோழிகளாச்சே. ஏன் படத்தில் இருந்து விலகினீர்கள்? என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.