சந்தோஷப்பட்ட ரஜினி - இயக்குநர் சிவா வெளியிட்ட முக்கிய தகவல்

annaatthe அண்ணாத்த
By Petchi Avudaiappan Nov 08, 2021 07:37 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

‘அண்ணாத்த’ படம் வெளியான பிறகு நடிகர் ரஜினி என்ன சொன்னார் என்பதை இயக்குநர் சிவா. தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா,  கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “அண்ணாத்த”. இப்படம் தீபாவளியையொட்டி கடந்த 4 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் இரண்டே நாளில் 100 கோடி ரூபாய்க்குமேல் வசூலைக் கடந்தது.

இந்த நிலையில், ’அண்ணாத்த’ வெளியாகி ஓடிக்கொண்டிருப்பது குறித்து ரஜினி என்ன சொன்னார் என்பதை இயக்குநர் சிவா கூறியுள்ளார். அண்ணாத்த ப்ளாக் ஃபஸ்டர் ஹிட் என்பதால் அடிக்கடி ரஜினி சாரிடம் பேசுகிறேன். ஒவ்வொரு முறையும் ரஜினி சாரிடம் போனில் பேசும்போது சந்தோஷத்துடன் சிவா சார்… படம் பெரிய சக்சஸ்ங்கிறாங்க சிவா சார்…. நாம ஜெயிச்சிட்டோம் சிவா சார் என்பார். அவர், அப்படி பேசுவதை கேட்பதற்கே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.