தனுஷூடன் 2 வார பேச்சுவார்த்தை ... சமாதான முயற்சியில் தோல்வியடைந்த ரஜினி?

Rajinikanth dhanush Aishwaryarajinikanth
3 மாதங்கள் முன்
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் விவாகரத்து விஷயத்தில் நடிகர் ரஜினிகாந்த் பலமுறை சமாதான முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த சில மாதங்களில் சமந்தா-நாகசைத்தன்யா, டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் தம்பதியினர் விவாகரத்து பெற்றது திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி பிரிவதாக தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கும் , தனுஷூக்கும் திருமணம் நடந்தது.

தனுஷூடன் 2 வார பேச்சுவார்த்தை ... சமாதான முயற்சியில் தோல்வியடைந்த ரஜினி?

காதல் திருமணம் செய்துக் கொண்ட இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். இவர்களின் 18 ஆண்டுகால மண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.  இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் வந்திருந்தாலும் 2 வாரத்திற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. 

இதுதான் என குறிப்பிட்டு சொல்லக்கூடிய காரணம் இல்லாவிட்டாலும், பல வருடங்களாக இருவருக்கும் எழுந்த பிரச்சனை மகன்களை காரணம் காட்டி, தந்தை ஸ்தானத்தில் ஒவ்வொரு முறையும் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியும் தள்ளிப்போடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விஷயத்தில் ”எங்க தலைவர் பாவம்” என ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.