ஐஸ்வர்யாவின் மீது இருந்த கோபம் தணிந்தது - குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் ரஜினி..!
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா மீது இருந்த கோபம் தனிந்ததால் தனது குடும்பத்தினருடன் சுற்றுலாவிற்காக அமெரிக்கா செல்கிறார்.
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தை மெகாஹிட் படமாக கொடுத்து தான் யார் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் மற்றும் ரஜினி இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தலைவர் 169 திரைப்படத்தில் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் ரஜினி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை விட்டு பிரிந்ததால் கடும் கோபத்தில் இருந்த அவர் தற்போது கோபம் தணிந்து ஐஸ்வர்யாவுடன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அமெரிக்காவிற்கு சுற்றுலா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.