தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்தை நான் நடத்தி வைக்கவில்லை : ரஜினி சொன்ன அதிர்ச்சி தகவல்
தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் குறித்து நடிகர் ரஜினி பேசியதாக தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கடந்த மாதம் இருவரும் அறிவித்தனர்.
இந்த தகவல் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இருவரும் சேர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இருவரையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதன்பின் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் ரஜினியிடம் தனுஷை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்ட விஷயத்தில் உங்களுக்கு சம்மதம் தானா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரஜினி தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு நான் திருமணம் செய்து வைக்கவில்லை. மீடியாக்காரர்கள்தான் அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தனர். நிர்பந்தம் காரணமாகவே அவர்களது திருமணம் நடைபெற்றது என கூறியுள்ளார். ஐஸ்வர்யா தனுஷை விட மூத்தவர் என்பதால் சிந்தித்து முடிவெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் தனுஷை கல்யாணம் செய்வதில் பிடிவாதமாக இருந்ததால் திருமணம் நடைபெற்றதாகவும் முன்னதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.