Friday, Jul 11, 2025

ரஜினி 169 இயக்குனர் மாற்றமா ? ரஜினியை முடிவெடுக்க சொன்னதா சன் பிக்சர்ஸ் ?

nelson thalaivar169 rajini169
By Irumporai 3 years ago
Report

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார், இரண்டு படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறவேண்டும். படத்தை பார்த்த பல ரசிகர்கள் தங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றே கூறிவருகிறார்கள்.

இப்படி கலவையான விமர்சனத்தை பீஸ்ட் படம் பெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் பீஸ்ட் படத்தை பார்த்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏனென்றால், நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து தான் படம் இயக்கவுள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினி 169 இயக்குனர் மாற்றமா ?  ரஜினியை முடிவெடுக்க சொன்னதா சன் பிக்சர்ஸ் ? | Rajini Stand In Thalaivar 169

மேலும், ரஜினி பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு அடுத்தாக நெல்சன் இயக்கவிருக்கும் படத்தின் வாய்ப்பை வேறொரு இயக்குனரிடம் கொடுக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சன் திலீப்குமாரை நம்பி தலைவர் 169 படத்தை தொடங்கலாமா இல்லை வேறு இயக்குநரை இயக்க வைக்கலாமா என்ற முடிவை ரஜினியிடமே விட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது வதந்தி தகவல் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். மற்றோரு தரப்பினர் பீஸ்ட் படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு நெல்சன் அடுத்த படத்திலாவது கதையிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தை பார்த்து ரஜினிகாந்த் எந்த கருத்துமே சொல்லாமல் இருந்தது, நெல்சன் இயக்கும் படத்தில் நடிப்பாரா ? என்ற கேள்வியை அதிகரித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட ஒரு இயக்குநரை திடீரென மாற்றுவதெல்லாம் படு பாதகமான செயல். அவருடைய கெரியரையே நாசம் செய்யும் வேலை. ஆகையால் ரஜினி அப்படி ஒரு காரியத்தை செய்ய மாட்டார் என்றே கூறுகின்றனர் சினிமா துறையினர்.