அவரை அடிக்கமாட்டேன், பயந்துபோன ரஜினி - வாய்ப்பை இழந்த முன்னணி நடிகர்!
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடிக்க இருந்த வில்லன் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
ஜெயிலர் படம்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தனது 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார்.
இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, என பல்வேறு மொழிகளில் ரிலீஸ்ஸாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
வில்லன் கதாபாத்திரம்
இந்நிலையில், அந்த இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் கூறுகையில், "வில்லனாக முன்னணி நடிகர் நடிக்க இருந்தார், அவர் தனக்கு நெருங்கிய நண்பர் அவரிடம் என்னை தான் பேச சொன்னார்கள். நான் பேசி சம்மதம் வாங்கிவிட்டேன். ஆனால் மறுநாள் அவர் வில்லனாக நடித்தால் அடிக்க வேண்டியிருக்குமே என தோன்றியது.
உடனே நெல்சனுக்கு போன் போட்டேன் அவரும் அதையே சொன்னார். அந்த நண்பருக்கு அழைத்து இதனை எடுத்துக்கூறினேன், உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க என அவரும் பெருந்தன்மையோடு சொன்ன பின்னர் தான் அந்த வில்லன் கேரக்டரில் விநாயகனை நடிக்க வைத்தோம்" என்று பேசினார்.
அந்த முன்னை நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன், இவரை அடிப்பதற்கு தான் ரஜினி பயந்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருந்தால் செம்ம மாஸ் ஆக இருந்திருக்குமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.