சசிகலாவின் உடல்நலம் குறித்து விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்

actor political admk
By Jon Feb 11, 2021 11:51 AM GMT
Report

சிறைத்தண்டனை முடிந்து விடுதலையாகி சென்னை திரும்பிய சசிகலாவின் உடல்நலம் குறித்து தன்னிடம் நடிகர் ரஜினிகாந்த் போனில் நலம் விசாரித்ததாக கூறியுள்ளார் டிடிவி தினகரன். 24 மணிநேர பயணத்துக்கு பின்னர் சசிகலா இன்று சென்னை திரும்பினார், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், நடப்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பால் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஸ்லீப்பர்செல் எம்எல்ஏவாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை, அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம்.

ஆர்.கே.நகர் மற்றும் தேனியில் ஒரு தொகுதி என சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். மேலும் சசிகலாவின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் போனில் விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.