அண்ணாத்த படம் ஓடிடியில் ரிலீசா? - என்னெங்க சொல்றீங்க...
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படமானது நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து விட்டதால், ரஜினி ரசிகர்களும், படக்குழுவினரும் செம குஷியாகி உள்ளனர்.இதனால் அண்ணாத்த படம் வசூலில் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் அண்ணாத்த படம் பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு படக்குழு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் முதல் வாரத்தில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிகிறது.