தனுஷை ஏற்க மறுத்த ரஜினி ? பிரச்சனைக்கு காரணம் இது தானா?
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறார். பல இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி பீஸ்ட் படத்தை இயக்கிவரும் நெல்சனிடமும் கதை கேட்டுள்ளார்.
இதில், ரஜினிக்கு நெல்சனின் கதை மிகவும் பிடித்துப்போக, அவரை தன் அடுத்த படத்தின் இயக்குனராக தேர்ந்தெடுத்தார்.
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான் என பேசப்பட்ட பல இயக்குனர்களில் ஒருவர் பால்கி. இவர் பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
தனுஷ் பாலிவுட்டில் நடித்த ஷமிதாப் படத்தையும் பால்கி இயக்கியிருந்தார். ஆகவே தனுஷின் மூலம் ரஜினிக்கு கதை சொல்லும் வாய்ப்பை பெற்றார் பால்கி.
ஆகவேபால்கிதான் ரஜினியின் அடுத்த இயக்குனர் என்றும் இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றவுள்ளார் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சில காரணங்களால் ரஜினி பால்கி படத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது .தான் சிபாரிசு செய்த இயக்குனரை ரஜினி நிராகரித்தது தனுஷிற்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது
மேலும் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்யப்போவதுள்ளதாக தகவல் வெளியான நிலையில் ரஜினியின் நிராகரிப்பு தனுஷிற்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
You May Like This