தனுஷ் சொன்னதை கேட்க மறுத்த ரஜினி? - அந்த பிரச்சனைக்கு இதுதான் காரணம் போல...

dhanush rajinikanth ரஜினிகாந்த் தனுஷ்
By Petchi Avudaiappan Feb 12, 2022 12:35 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்கவுள்ள நிலையில் கடைசி நேரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது புதிய படங்களில் ஏதும் நடிக்காமல் ஓய்வில் இருந்த நிலையில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா - நடிகர் தனுஷ் விவாகரத்து நிகழ்வு அவரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்பட்டது.

அதேசமயம் ரஜினி இந்த பிரச்சனையில் இருந்து மீள தனது அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளாராம். இதற்காக கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், வெங்கட் பிரபு, தேசிங் பெரியசாமி உள்ளிட்டவர்களிடம் கதை கேட்டதாக சொல்லப்பட்டது.

இதனையடுத்து ரஜினியின் 169வது படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், நெல்சன் இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

ஆனால் ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான் என கூறப்பட்ட பல இயக்குனர்களில் பால்கியும் ஒருவர் . தமிழ்நாட்டை சேர்ந்த இவர் பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தனுஷ் -அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ஷமிதாப் படத்தையும் இவர் தான் இயக்கியிருந்தார்.

எனவே தனுஷ் மூலம் நடிகர் ரஜினிக்கு கதை சொல்லும் வாய்ப்பை பால்கி பெற்றிருந்ததாகவும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றவுள்ளார் எனவும் கூறப்பட்டது. கடைசி நேரத்தில்  ஒருசில காரணங்களால் ரஜினி பால்கி படத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியானது.

ரஜினியின் இத்தகைய முடிவுக்கு காரணம் மகளுடனான விவாகரத்து முடிவை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தனுஷ் சுமூகமான முடிவு எடுக்காமல் இருப்பது தான் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

You May Like This