விஜய் மீது பொறாமையா? மனம் திறந்த ரஜினி
தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைத்துள்ளது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தவெக வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் செயற்பாடுகள் குறித்து சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது பேசியுள்ள ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், எனக்கும் மிக நீண்ட நட்பு உள்ளது.
கொளத்தூரில் அவரது தோல்வி எனக்கு நெருடலை ஏற்படுத்தியதால் ஸ்டாலினை சந்தித்தேன்.

சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் வெற்றி ஆச்சரியம் கலந்து உண்மை தான், எனக்கு பொறாமை இல்லை.
விஜய் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வார ்என்ற நம்பிக்கை உள்ளது, விஜய்யின் ரசிகர்களும் தொண்டர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், உங்களது செயல்பாடுகள் விஜய்யை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், 2021ல் போட்டியிட்டிருந்தால் வென்று இருப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரஜினி, 100 சதவீதம் உறுதி என்றும், அந்த தேர்தலில் நான் போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் வென்றிருப்பேன் என பதிலளித்துள்ளார்.
