ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்தக் கட்சியிலும் சேரலாம் - சுதாகர் அறிவிப்பு
நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டேன் என அறிவித்திருந்தது அவரது ரசிகர்கள் உட்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.ஆனாலும் அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வித விதமாக போஸ்டர் ஒட்டி போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்காதீர்கள் என மிகவும் வருத்தத்துடன் ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது ரஜின் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நான்கு மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
அவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் யாரும் மறந்துவிடக்கூடாது.