ரஜினி எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன் எனத் தெரிவிக்கவில்லை - தமிழருவி மணியன் அதிரடி
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி பல்வேறு சர்ச்சைகள் வலம் வந்து கொண்டிருந்தன. இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி அறிவித்துவிட்டார்.
இதனால் பலர் மகிழ்ச்சியடைந்தனர், சிலர் அதிர்ச்சியடைந்தனர். நடிகர் ரஜினிகாந்தை வைத்து பாஜக போட்டு வைத்திருந்த அரசியல் கணக்குகள் அனைத்தும் தகர்ந்தன. பாஜகவிலிருந்து ரஜினி கட்சியில் இணைந்த அர்ஜூன் மூர்த்தி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் ரஜினியுடன் இருந்த தமிழருவி மணியன் அரசியலில் இருந்து முழுவதும் விலகப்போவதாக அறிவித்துவிட்டார். தற்போது ரஜினி எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன் எனத் தெரிவிக்கவில்லை எனத் தமிழருவி மணியன் பேசியுள்ளார்.
மேலும், “காலச் சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில், தற்போது அவர் கட்சி தொடங்குவதை தவிர்த்திருக்கிறார்; ரஜினி மக்கள் மண்றத்தை அவர் கலைத்துவிடவில்லை” என்றுள்ளார்.