“என்ன இப்படி சொல்லிட்டீங்க?” - ரஜினி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் ரஜினி தனது அடுத்த படத்தில் வைகைப்புயல் வடிவேலுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி ஓய்வில் இருந்து வரும் நிலையில், மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவித்து வருவதாக ரஜினி ரசிகர்கள் ஒருபுறம் வருத்தம் அடைய, மறுபுறமோ அவர் பழைய நிலைக்கு மீண்டு வரவேண்டும் என்ற எண்ணமே அனைவரிடத்திலும் மேலோங்கி உள்ளது.
இதனிடையே ரஜினி தற்போது தன் அடுத்த படத்திற்கான கதையை பல இயக்குனர்களிடம் கேட்டுவருகிறார். வெங்கட் பிரபு, நெல்சன், தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குநர்கள் அவருக்கு கதை சொல்லியதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ரஜினி தனது அடுத்தப்படத்தில் நடிகர் வலுவேலுடன் நீண்ட இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பின்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.