ஜெயிலர் வெற்றிக்கொடுத்த சந்தோசம்....தடபுடல் விருந்திற்கு தயார்படுத்தும் ரஜினி

Rajinikanth Jailer Leo
By Karthick Aug 16, 2023 08:12 AM GMT
Report

தனது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிக பெரிய வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், படக்குழு மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ரஜினி விருந்து அளிக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.\

ஜெயிலர்   

rajini-makes-arrangement-for-party

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் என பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் 450 கோடி ரூபாய் வசூலை தாண்டி 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

நீண்ட காலமாக ரஜினி எதிர்பார்த்த ஒரு வெற்றியாக இந்த படம் அமைந்துள்ள நிலையில், இமய மலை சென்றிருந்த ரஜினி தற்போது மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தடபுடலான விருந்து

ரஜினியின் box office stamina குறித்தும் அவரின் சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்த எழுந்த கேள்விகள் பலவற்றிற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், இந்த மகிழ்ச்சியை கொண்டாட ரஜினி தடபுடலான விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.

rajini-makes-arrangement-for-party

படக்குழு மற்றும் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் இந்த விருந்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படும் நிலையில், இதில் யார் யார்க்கு அழைப்பு விடுக்கப்படும், இந்த விருந்து எப்போது நடத்தப்படும் என்பது போன்ற செய்திகள் விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.