அமெரிக்காவில் சூதாடி 150 கோடிய இழந்த ரஜினி..? பரபரப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சி தகவல்

Rajinikanth Anirudh Ravichander Nelson Dilipkumar Jailer Kalanithi Maran
By Karthick Sep 24, 2023 07:48 AM GMT
Report

நடிகர் ரஜினி சூதாடி 150 கோடி ரூபாய் வரை நடிகர் ரஜினி இழந்துள்ளதாக சினிமா விமர்சகரின் கருத்துக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினி 

தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக விளங்கி வருபவர் ரஜினி. தோல்விகளின் காரணமாக சிறிது காலம் துவண்டு போயிருந்த ரஜினியின் திரைவாழ்க்கை கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியதாக எழுதப்பட்ட நிலையில், ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி தமிழ் திரையுலகம் மட்டுமின்று தென்னிந்திய அளவில் மாபெரும் வசூலை ஈட்டியது.

rajini-loses-150-crore-in-casino-says-bismi

தற்போது லால் சலாம், டி.ஜே.ஞானவேல் மற்றும் லோகேஷ் கனகராஜுடன் அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகி வரும் ரஜினிக்கு ஜெயிலர் வெற்றிக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன், விலையுர்ந்த காரை பரிசாக அளித்து மகிழ்ந்தார்.

பிஸ்மி விமர்சனம் 

இந்த கார் குறித்து ஜெயிலர் படத்தின் சக்ஸஸ் பார்ட்டியில் பேசிய ரஜினி, இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு கலாநிதி மாறன் வழங்கிய காரில் பயணித்த பிறகு தான் பணக்காரனாகி விட்டதாக உணருவதாக கூறினார். இந்த கருத்துக்கள் பெரும் வைரலானது.

இந்நிலையில், இது குறித்து சினிமா விமர்சகர் பிஸ்மி பேட்டி ஒன்றில் கடுமையாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், ரஜினி பெரிய செல்வந்தர், அவரிடம் உள்ள கோடிகளை எண்ண இரண்டு கை பத்தாது என்று கூறி, அத்தனை கோடிகளை அடுக்கி வைத்திருந்தாலும், அவர் மனதளவில் மிகவும் எளிமையானவராக தான் இருக்கிறார் என கூறினார்.

rajini-loses-150-crore-in-casino-says-bismi

அதேபோல் ரஜினி தான் இப்போ தான் பணக்காரனாக உணர்வதாக கூறியது மிகைப்படுதப்பட்டதாகவே பார்க்க முடிகிறது என விமர்சித்த பிஸ்மி, ரஜினி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழவில்லை. பல ஆண்டுகளாக கோடீஸ்வரனாகவே உள்ளார் என தெரிவித்தார்.

rajini-loses-150-crore-in-casino-says-bismi

100 கோடி, 150 கோடி சம்பளம் வாங்கிவிட்டு அதனை எப்படி செலவு செய்வது என தெரியாமல், அமெரிக்காவில் சூதாடி இந்த பணத்தையெல்லாம் தோற்று வரும் அளவிற்கு அவர் சென்று விட்டார் என சுட்டிக்காட்டி தனது விமர்சனத்தை முன்வைத்தார்.