‘ரஜினிக்கு சோதனை மேல் சோதனை’ - ஆனாலும் மனுஷன் அசரவே மாட்டாரு போல..!
நடிகர் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் அறிவித்தனர்.
இருவரையும் இணைக்க இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஜினியும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரசியல் பயணத்தில் பின்வாங்கியது, படங்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்காமல் போனது என ரஜினிக்கு சோதனை மேல் சோதனையாக இருந்த நிலையில் மகளின் விவகாரத்து சம்பவம் பெரிய அளவில் மன வருத்தத்தை கொடுத்தது.
Recent clicks of Superstar #Rajinikanth.#Thalaivar169 pic.twitter.com/YiWp4FQNK8
— Manobala Vijayabalan (@ManobalaV) February 18, 2022
இதற்கிடையில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி தனது 169வது படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடம் பெருமளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ரஜினியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிரிப்புடன் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ள ரஜினி கவலைகளை மறந்தபடி இருப்பதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.