நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்!

ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் KP.முனுசாமி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.அவரது குழந்தைகளின் முழு கல்வி செலவை ஏற்றார் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் நகர ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் கே.பி.முனுசாமி.இவர் நடிகர் ரஜினிகாந்தின் மீது அதீத பற்று கொண்டவர். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அப்போது இவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை முன்னாள் மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் செய்து வந்தார்.

இந்தநிலையில் கே.பி.முனுசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்த அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்த கே.வி.எஸ்.சீனிவாசன் அவரது குழந்தைகளின் முழு கல்வி செலவையும் தான் ஏற்று கொள்வதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னலம் கருதாமல் உதவி கரம் நீட்டி வரும் கே.வி.எஸ்.சீனிவாசன் அப்பகுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்