ரஜினியை சந்தித்த கமல்: அடுத்த அரசியல் நகர்வா?

actor tamilnadu politician
By Jon Feb 27, 2021 08:30 AM GMT
Report

ஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டேன் என்று முறைப்படி அறிவித்து விட்டார். இதனால் அனைவரின் பார்வையும் தற்போது கமல்ஹாசன் மீது திரும்பியுள்ளது. அவரது அரசியல் அணுகுமுறையும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது. கமலின் அரசியலில் அணுகுமுறை பல்வேறு விமர்சனங்களையும் வரவேற்புகளையும் பெற்றுள்ளது.

ரஜினி அண்ணாத்த பட படபிடிப்புக்கு சென்ற போது இரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ரஜினி உடல்நிலைதேறியதும் அவரை சந்திப்பேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று ரஜினியின் இல்லத்தில் வைத்து கமல்ஹாசன் அவரைச் சந்தித்துள்ளார். கிட்டதிட்ட பல நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்து கொண்டது பேசு பொருளாகி உள்ளது.

ரஜினியிடம் இந்த தேர்தலில் ஆதரவு கேட்பேன் என கமல் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து இன்று பேசப்படுமா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர். ஆனால் இருவரும் சந்தித்து அரசியலை தவிர்த்து நட்பு ரீதியான சந்திப்பு என்றும் ரஜினியின் உடல்நிலைகுறித்துதான் கமல் கேட்டறிந்தர் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இவர்களின் சந்திப்பு நட்பு ரீதியாக கூறப்பட்டாலும் இருவரின் சந்திப்பு தமிழக அரசியலில் அடுத்த நகர்வாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.