ஜெயிலராக ஜெயித்தாரா ரஜினி?..ரசிகர்களின் Twitter Review

Rajinikanth Anirudh Ravichander Nelson Dilipkumar Jailer
By Karthick Aug 10, 2023 06:01 AM GMT
Report

நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களின் Twitter review தொகுப்பை தற்போது காணலாம்.

ஜெயிலர்

ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் "ஜெயிலர்". அனிருத் இசையில், மோகன்லால், சிவராஜ்குமார் என பலர் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி போன்றோரும் நடித்துள்ளனர்.

கொண்டாடும் ரசிகர்கள்   

படத்தின் முதல் காட்சியை கண்டு twitter'இல் review கொடுத்துள்ள ரசிகர்கள், படம் மிக பெரிய பிளாக்பாஸ்டராக அமைந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் நடிப்பு, நெல்சனின் திரைக்கதை, அனிருத்தின் சிறப்பான இசை என அனைத்தும் சிறப்பாக உள்ளது பெருமபாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பீஸ்ட் படத்தின் எதிர்பாராத தோல்விக்கு பிறகு நெல்சனும், அண்ணாத்தே படத்தின் தோல்வியை அடுத்து ரஜினியும் நிச்சயமாக வெற்றி படத்திற்கு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

குறிப்பாக நீண்ட நாட்களாக ரஜினி ரசிகர்களும் ஒரு மிக பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் நிலையில் தான் தற்போது படம் வெளியாகி இருக்கிறது.