கொஞ்சம் கூட மரியாதையே இல்லையா - அர்ஜுன் மகள் வரவேற்பில் ரஜினிக்கு அவமானம்?
நடிகர் உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது.
சம்மந்திகளான அர்ஜுன் - தம்பி ராமையா
நடிகர்கள் அர்ஜுன் - தம்பி ராமையா இருவரும் அதிகாரபூர்வமாக சம்மந்திகளாக மாறியுள்ளனர். உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜுன் இருவரும் காதலித்து தற்போது தம்பதிகளாகியுள்ளனர்.

இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், நட்சத்திரங்கள் பங்கேற்க திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், பல திரை துறையை சேர்ந்த நடிகர்கள் கலந்து கொண்டார்கள்.
கிஃப்ட் கூட வாங்க'ல
அந்த வகையில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
ரஜினி மேடையேறி, மணமக்கள் உமாபதி - ஐஸ்வர்யாவை வாழ்த்திவிட்டு, தான் கொண்டு வந்த பரிசை அவர்களிடம் கொடுக்க நீட்டினார். ஆனால் அதனை தம்பி ராமையா, அர்ஜுன் குடும்பத்தினர் கவனிக்கவில்லை. பரிசை யாரும் வாங்காத நிலையில், சட்டென ரஜினியே தனது கைகளால் மணமக்களின் பின்னால் வைத்தார்.

 
இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. ஒருபுறத்தில் விமர்சனங்கள் வரும் நிலையில், பரபரப்பில் கவனிக்க தவறியிருப்பார்கள் என்றும் ஒரு புறம் கருத்துக்கள் வர துவங்கியுள்ளன. இருப்பினும் சிலர் கசப்பான கருத்துக்களை பதிவிடுகிறார்கள்.   
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    