"ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதுன்னு சொன்னதெல்லாம் பொய்யானது" - மன்ற நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!

cinema actor super star
By Jon Feb 16, 2021 12:53 AM GMT
Report

ரஜினிகாந்த் உடல் நிலை சரி இல்லை என்று பொய் சொல்லி மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் என்று கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் ஆர்.எஸ். ராஜன் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். ரஜினி மக்கள் மன்ற குமரி மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் உள்ளிட்டோர் மன்றத்தை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ராஜன் ரஜினிகாந்த் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை தற்போது வைத்திருக்கிறார். இது குறித்து ஆர்.எஸ்.ராஜன் பேசுகையில், ரஜினி தன்னை மட்டும் ஏமாற்றவில்லை, ஒட்டுமொத்த ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றி இருக்கிறார். எந்திரன் படத்தை ரூ.800 கோடிக்கு விற்க தான் அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் உடல் நிலை சரியாக இல்லை என்று பொய் நாடகமாடி மருத்துவமனையில் படுத்துக் கொண்டார்" என்றார்.ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட மற்றொரு நிர்வாகியான சதீஷ்பாபு, உரிய விளக்கம் அளிக்காவிட்டால் ராகவேந்திரா மண்டபத்தில் தீக்குளிப்பேன் என்று பகீர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.


Gallery