நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன்.. ரஜினி உடல் நலன் குறித்துகவிஞர் வைரமுத்து !

health vairamuthu rajin
By Irumporai Jun 27, 2021 12:37 PM GMT
Report

மருத்துவ பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் சமீபத்தில் அமெரிக்கா சென்றனர் ரஜினி. அங்கு ரோசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா வெளியே வரும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துஅமெரிக்காவில் உள்ள நடிகர் ரஜினி மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில்,அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்;

மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம் - நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.