ரஜினி ரசிகர்களை திட்டி கட்டுரை வெளியிட்ட குருமூர்த்தி
ரஜினி கட்சி தொடங்காததால் அவரது ரசிகர்கள் அதிமுக, திமுகவில் சேர்ந்து வருகிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்களை கேவலமாக பேசி துக்ளத் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த கட்டுரையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்ததையடுத்து, இதுதாண்டா சமயம் என்று அவரது ரசிகர் மன்றத்தினர் படை படையாக திமுகவிலும் அதிமுகவிலும் சேர்ந்து கொண்டு வருகிறார்கள்.
எந்த ஊழலை ஒழிக்க வேண்டுமென்று ரஜினி நினைத்தாரோ, அந்த ஊழலின் பிறப்பிடமான திமுகவில் ரசிக சிகாமணிகள் சேர்ந்தது சிலருக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால், இதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் வேண்டுமானால் தேசியவாதியாக, ஆன்மீகவாதியாக, நேர்மையாளராக இருந்து வரலாம். ஆனால் அவருடைய ரசிகர்கள் காமராஜர், கக்கன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர்கள் அல்ல.

தலைவா தலைமையேற்க வா என்று ஊர் ஊருக்கு போஸ்டர் அடித்து ஒட்டியதால் தியாகத்தின் திரு உருவங்கள் கிடையாது. ஆதாயத்தை எதிர்பார்க்காமலா இதையெல்லாம் செய்திருப்பார்கள். நல்ல வேளையாக ரஜினிகாந்த் தப்பித்துக் கொண்டார்.
ரஜினி ரசிகர்களுக்கும் அரசியல் என்பது பணம் செய்கின்ற வழி. அதனால் தான் இவ்வளவு அவசர அவசரமாக கட்சிகளில் இணைந்து கொண்டிருக்கிறார்கள் என பேசியிருக்கிறார்.