முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ரஜினிகாந்த்: கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார்
Corona
Stalin
Rajini
Fund
By mohanelango
தமிழக அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும். நிறுவனங்களும் முதல்வர் நிதிக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்து வந்தனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.
தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தவர் வாழ்த்து தெரிவித்ததோடு ரூ.50 லட்சம் நிதியுதவியும் அளித்துள்ளார்.
மக்கள் அனைவரும் அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.