ஒரே ஆண்டில் ரஜினி, தனுஷ், சூர்யாவை ஓரங்கட்டி சாதனை படைத்த நடிகர் சிம்பு - குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் சிம்பு சிறுவயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்திருக்கிறார்.
உடல் எடை அதிகரித்ததால், சில ஆண்டுகளாக சினிமாவில் வெற்றி கிடைக்காமல் போனது. ஆனால், கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அவர் உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல், தற்போது தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அதில் தொடர்ந்து ஏராளமான பாலோவர்கள் கிடைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்திருக்கிறார் நடிகர் சிம்பு. அவரை இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகிறார்கள்.
இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களை கொண்ட கோலிவுட் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் நடிகர் சிம்பு.
பல ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் இருக்கும் சூர்யா, ரஜினி ஆகியோரை ஒரே ஆண்டில் ஓரங்கட்டி சிம்பு படைத்துள்ள இந்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சமீபத்தில் சிம்பு வெளியிட்ட தனது ஆத்மன் வீடியோவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.