ரஜினி மகள் வெளியிட்ட புகைப்படம்: ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்

rajini daughter dhanush
By Jon Mar 12, 2021 01:24 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் , வெளியிட்ட யோகா புகைப்படமொன்று ரசிகர்கள் மத்தியி வைரலாகி வருகிறது. ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ், தற்போது அடுத்த படத்திற்கு அவர் தயாராகிவரும் நிலையில், சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா குறித்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். வில்லாய் வளைந்து அவர் கொடுத்துள்ள போஸ் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

மேலும் இந்த யோகாவின் பெயர் என்ன? இதை எப்படி செய்ய வேண்டும்? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன? என்பதையும் அவர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.