சென்னை திரும்பிய நடிகர் ரஜினி! தெய்வமே என விமான நிலையத்தை தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்!

chennai actor rajinikanth arrive
By Anupriyamkumaresan Jul 09, 2021 06:33 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார். கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டது.

இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை திரும்பிய நடிகர் ரஜினி! தெய்வமே என விமான நிலையத்தை தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்! | Rajini Chennai Arrive From America

இதையடுத்து, அவ்வப்போது ரஜினிகாந்த் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த 19 ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய அரசின் அனுமதியோடு ரஜனிகாந்த் அமெரிக்கா சென்றிருந்தார்.

சென்னை திரும்பிய நடிகர் ரஜினி! தெய்வமே என விமான நிலையத்தை தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்! | Rajini Chennai Arrive From America

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு ரஜினிகாந்த் இன்று அதிகாலை 3 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமானத்தில் வந்த ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் தலைவா வாழ்க என கோஷமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.