சிவகார்த்திகேயனால் கதறி அழுத ரஜினிகாந்த் ... ஒரே போன் காலால் நெகிழ்ந்த ரசிகர்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டைப் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் டான். கடந்த மே 13 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இதனிடையே நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக சிவகார்த்திகேயன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக தகவல் வெளியானது. மேலும் டான் படம் சூப்பர், சூப்பர், பிரமாதம். மிக நல்ல நடிப்பு. 30 நிமிடங்களாக என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என ரஜினிகாந்த் தன்னிடம் கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.