மீண்டும் பாட்ஷாவாக மாறிய ரஜினி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

rajini viral movie batsha
By Anupriyamkumaresan Jul 08, 2021 10:32 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

பாட்ஷா' திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியைப்போல, அமெரிக்காவில் ரஜினிகாந்த் ஒரு நாயுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் பாட்ஷாவாக மாறிய ரஜினி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்! | Rajini Batsha Pose In America Viral Photo

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்தப்படத்தில் வில்லன்களுடன் ரஜினிகாந்த் ஸ்டைலாக அமர்ந்து பேசும்போது ஒரு நாயும் முக்கியமான கதாபாத்திரத்தில் இடம்பெற்றிருக்கும்.

அந்த காட்சியைப் போலவே தற்போது அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த், ஒரு ரசிகரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர் அருகே Labradoodle வகை நாய் ஒன்று அமர்ந்துள்ளது.

மீண்டும் பாட்ஷாவாக மாறிய ரஜினி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்! | Rajini Batsha Pose In America Viral Photo

இந்தக் காட்சி, 'பாட்ஷா' திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியைப்போல் இருக்கிறது என்று ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.