பிரச்சனைகளுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே சென்ற ரஜினி - எங்கே சென்றார் தெரியுமா?

Rajinikanth dhanush ரஜினிகாந்த் தனுஷ் ஐஸ்வர்யா
By Petchi Avudaiappan Feb 07, 2022 04:54 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது புதிய படங்களில் ஏதும் நடிக்காமல் ஓய்வில் உள்ளார். இதற்கிடையில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா - நடிகர் தனுஷ் விவாகரத்து நிகழ்வு அவரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் ரஜினி இந்த பிரச்சனையில் இருந்து மீள தனது அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளாராம். இதற்காக கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், வெங்கட் பிரபு, தேசிங் பெரியசாமி உள்ளிட்டவர்களிடம் கதை கேட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் அன்புச்செழியன் அவரது இல்லத்திருமண விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக ரஜினியின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் பல நாட்களுக்குப் பிறகு சென்னையில் ஒரு ஹோட்டல் திறப்பு விழாவிற்கு ரஜினி, தனது மனைவி லதா மற்றும் இளைய மகள் சௌந்தர்யா உடன் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைக் கண்ட ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

You May Like This