அரசியலுக்கு வந்தா நிம்மதி போயிடும் to அரசியல் எண்ணமே இல்லை: ரஜினியும் அரசியலும்.. 1990 முதல் 2021 வரை சின்ன ரீவைண்ட்
1990- தளபதி படம் வெளியான சமயம் தமிழகத்தின் சில மாவட்டங்களில், வருங்கால முதல்வர் ரஜினிதான் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் ரஜினியின் அரசியல் பயணம் தொடங்கிவிட்டதாக பல இதழ்களில் செய்திகள் வெளியாகின .

அரசியலே வேண்டாம்:
ஆனால் அரசியல் பிரவேசமே தனக்கு ஒத்துவராது என ஒதுங்கியிருந்தார் ரஜினி என்றுதான் கூறவேண்டும். அப்போது முதல்வராக இருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தமிழகத் திரைத்துறையின் சார்பில், ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அந்த விழாவில், ஜெயலலிதாவின் முன்பு பேசிய ரஜினி,நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ அதே சமயம் ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போயிடும் என பேசியுள்ளார்
இப்படி பேசிய ரஜினிதான்1992-ம் ஆண்டு போயஸ் கார்டனில், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் வருகைக்காக ரஜினியின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாக .

அதன் எதிரொலியாக அண்ணாமலை படத்தில் எம்பாட்டுக்கு என் வேலையை செஞ்சிக்கிட்டு ஒரு வழில போய்க்கிட்டிருக்கேன் என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன் என தன் முதல் அரசியல் வசனத்தைப் சினிமாவில் பதிவு செய்தார் ரஜினி.
இந்தவசனம் அபோது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை தாக்கி பேசப்பட்டதாகவே பார்க்கப்பட்டது.
அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் அரசியல் பிரவேசம் குறித்த வசனங்கள் இடம்பெற்றன .
நேரடி அரசியல் ஆதரவு:
அதன்பின்னர் 1995-ல் வெளியான முத்து படத்தில், நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்.என்று அவர் பேசிய வசனம் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார்' என்றே நம்பவைத்தது.

1995-வரை திரையில் மட்டுமே அரசியல் பேசிய ரஜினி, முதன்முறையாக 1996-ல் வெளிப்படையாகவே அரசியல் பேசினார்
தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது
. அந்த ஆண்டில், ஜெயலலிதாவை எதிர்த்துப் பல கருத்துகளை முன்வைத்தார் ரஜினி. ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று அவர் சொன்ன கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்மூலம் 1996 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இது ரஜினியால் கிடைத்த வெற்றியாகவே அவருடைய ரசிகர்கள் கருதினார்கள்.
பாபா சர்சை:
2002-ல் வெளியான `பாபா' படத்தில், ரஜினி புகைபிடிக்கக் கூடாது என்று பா.ம.க கடுமையாக எதிர்த்தது. 2004-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ம.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் ரஜினிகாந்த்.ஆனால், போட்டியிட்ட ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றதுபா.ம.க.

இதற்கிடையில், 2001-ம் ஆண்டு மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதாவைச் சந்தித்து, பூங்கொத்துக் கொடுத்ததோடு, தைரிய லட்சுமி' என்று ஜெயலலிதாவுக்குப் புகழாரமும் சூட்டினார் ரஜினி.
2010-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதிக்குத் தமிழக திரைத்துறையினர் சார்பில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் பேசிய அஜித்தின் பேச்சுக்கு ரஜினியும் ஆதரவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களிலேயே ரஜினியும் அஜித்தும் அன்றைய முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து அந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளிவைத்தார் ரஜினி.
2010-கு பிறகு நேரடி அரசியல் குறித்த எந்த விஷயத்திலும் ரஜினி தலையிடவில்லை.
பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்னை வந்திருந்த மோடி, திடீரென ரஜினியைச் சந்தித்துப் பரபரப்பைக் கிளப்ப மரியாதை நிமித்தமாகத்தான் மோடி சந்தித்திருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.
சிஸ்டம் சரியில்லை:
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு, மே மாதம் தன் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் உள்ளது என்று சிஸ்டம் கெட்டுப்போச்சு என குழப்பினாலும் ,ரஜினிக்கு அரசியல் ஆர்வம் இருப்பதாகவே நம்பினர் அவரது ரசிகர்கள்.
டிசம்பர் 31-ம் தேதி, இரண்டாவது முறையாக ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. இம்முறை எப்படியும் கட்சித் தொடங்கிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்க , 234 தொகுதியிலேயும் நாம போட்டியிடுறோம்`கட்சி ஆரம்பிப்பது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று கூறினார்
அதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டில், பல முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டார்.
ரஜினியின் அரசியல் பின்னடைவு:
அதே சமயம் ரஜினி கட்சி தொடங்குவது என்ற செய்தி உறுதியானதும் அரசியல் விவகாரத்தில் பின்னடைவினையே சந்தித்தார்.
காவிரி மீட்புப் போராட்டத்தின்போது போலீஸார் சிலர் தாக்கப்பட்டதற்கு வன்முறையின் உச்சக்கட்டம் என கூறியது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சமபவத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்னையில்பத்திரிகையாளர்கசந்தித்த போது மக்கள் எல்லாத்துக்கும் போராட்டம் போராட்டம்னு போனா... தமிழ்நாடு சுடுகாடா மாறிடும் என்று ஆவேசமாகப் பேசியதால் அவரின் அரசியல் பயணம் வெகுவாக சரிக்கியது என்றே கூறலாம்
ரஜினிகாந்த் சினிமாவைப்போலவே அரசியலை பார்க்கிறார் யாரோ எழுதிக் கொடுத்து பேசுகிறார் என்ற விமர்சனங்கள் ரஜினியைச் சூழ்ந்தன.
அதன்பிறகு சில மாதங்கள் கடந்த பிறகு ரஜினியின் உடல் பாதிக்கபட்டு இருப்பதாக ட்விட்டரில் செய்தி வெளியாக அதற்கு பதில் கொடுத்த ரஜினி தமிழக மக்களுக்காக உயிரே போனாலும் நான் சந்தோஷப்படுவேன். அரசியல் மாற்றம் ரொம்ப கட்டாயம். என கூறினார்.
இந்த நிலையில் ஜனவரியில் கட்சி தொடங்குவார் என்று ரஜினி அறிவித்த நிலையில் `பா.ஜ.க-வின் பி-டீம் தான் ரஜினி அமித் ஷாவின் ஆதரவோடு ஓட்டுகளைப் பிரிக்க ரஜினியைக் களமிறக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின.

மேலும் ரஜினியின் ஆன்மிக அரசியல் கொள்கை மக்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை கொடுத்தன ஒருவேளை ரஜினி பாஜகவின் ஆதரவாளரோ என மக்கள் நினைக்க தொடங்கினர்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக சென்ற ரஜினிதிடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது கொரோனா 2 வது அலை பரவத் தொடங்கிய சமயம் என்பதால் இனி ரஜினி அரசியல் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் கூறியதால்இனி அரசியல் பிரவேசம் இல்லை என குறிப்பிட்டு பெரும் அதிர்ச்சி கொடுத்தார். இந்த முடிவை அரைமனதாக ஏற்றுக் கொண்டனர் அவரது ரசிகர்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் பரிசோதனைக்காக அமெரிகா சென்று வந்த ரஜினி 12 ம் தேதி தனது ரசிகர்களை சந்திப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி
அதில் காலச் சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை,
ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தனது நேரடி அரசியல் பயணத்திற்கு ரஜினி முற்றுபுள்ளி வைத்தாலும் திரைத்துறையில் இனி சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
{ஆதாரம்: விகடன், வரலாற்றுசுவடுகள், வரலாற்றுச்சுவடுகள் சினிமா}