“அண்ணாத்த வெற்றி படம் தான், மழை வரலைன்னா இன்னும் பெரிய ஹிட் ஆயிருக்கும்” - ரஜினிகாந்த்

audio goes viral thalaivar rajinikanth about annaththe on hoote app
By Swetha Subash Dec 23, 2021 11:36 AM GMT
Report

ரஜினி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ ஆகியோர் நடித்து கடந்த மாதம் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக  நல்ல வசூலை பெற்றிருந்தது.

அண்ணாத்த படம் ரிலீஸானதற்கு முன் ரஜினி தனது பேரனோடு அந்த படத்தை பார்த்தார்.

படம் பார்த்தது பற்றி அவர் தன் மகள் தொடங்கிய ஹூட் ஆப்பில் பேசியது அப்போது வைரலானது. அதன் பிறகு அந்த படம் எப்படி ஆரம்பித்தது, எப்படி உருவாகியது, என்று ஹூட் ஆப்பில் ஒரு தொடராகவே போட்டு வருகிறார்.

தற்போது, கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு எப்படி நடந்தது, எப்படி இந்த படம் வெற்றிகரமாக முடிந்தது, படக்குழு சந்தித்த இன்னல்கள் என்ன? துன்பங்கள் என்ன? தடைகளை பற்றி பேசியுள்ளார்.

மேலும், அண்ணாத்த படம் வெற்றி படம் என்றும், மழை வரலைன்னா இன்னும் பெரிய ஹிட் ஆகிருக்கும் என்றும் கூறியுள்ளார்.