ஹெச். ராஜாவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த ரஜினி

Rajinikanth H Raja
By Yashini Feb 03, 2026 08:00 AM GMT
Report

சென்னை தனியார் தொலைக்காட்சி நடத்திய அரசியல் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திடீரென மயங்கி விழுந்தார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மூளையின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது. 

எச்.ராஜாவுக்கு பக்கவாதம்: கலக்கத்தில் பாஜக

எச்.ராஜாவுக்கு பக்கவாதம்: கலக்கத்தில் பாஜக


தற்போது மருத்துவர்கள் குழு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பல அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று ஹெச். ராஜாவை நலம் விசாரித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.

எச்.ராஜாவின் உடல்நிலை: மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

எச்.ராஜாவின் உடல்நிலை: மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

  

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்தும் மருத்துவமனைக்கு சென்று ஹெச். ராஜாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.   

ஹெச். ராஜாவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த ரஜினி | Rajin Meets H Raja Who Is Admitted To Hospital