கட்டம் கட்டும் சிபிஐ: வசமாக மாட்டிய ராஜேஷ் தாஸ்
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு எதிராக புகார் எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியதையடுத்து, விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை பெண் அதிகாரிகளுக்கே இந்த நிலைமையா? என அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.
அதோடு, இந்த வழக்கை நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும் என தெரிவித்திருந்தது. ராஜேஷ் தாஸுக்கு எதிரான வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிமன்றம், அவரை ஏன் இன்னும் சஸ்பெண்ட் செய்யவில்லை? தடுத்த எஸ்.பி மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் சிபிசிஐடி விசாரணைக்காக நேரில் ஆஜரானார் காலையிலேயே ராஜேஷ் தாஸ் அலுவலகத்துக்கு வந்து விட்டார். அங்கு யாரிடமும் பேசாமல் வேகமாக அலுவலகத்துக்குள் சென்று விட்டார்.
அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தனி அறையில் விசாரணை நடத்தினர். விசாரணை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் முடிவில் ராஜேஷ் தாஸ் வெலவெலத்து போனதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.