"மோடி தான் எங்கள் டாடி" ராஜேந்திர பாலாஜியை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்

dmk stalin udhayanidhi Rajenthra Bhalaji
By Jon Mar 25, 2021 11:04 AM GMT
Report

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை போலவே தன் தொகுதியில் மட்டுமல்லாது அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வேட்பாளர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டையில் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகரில் வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சாத்தூரில் மதிமுக வேட்பாளர் ரகுராம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழக மக்கள் ஜிஎஸ்டியாக ரூ.15 ஆயிரம் கோடி கொடுத்திருக்கிறார்கள். இதில் தமிழகத்தின் பங்கை அளிக்க மோடி மறுத்து வருகிறார். நிதி பற்றாக்குறை என்கிறார். ஆனால் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இரு விமானங்கள் வாங்கி இருக்கிறார். மோடி பண மதிப்பிழப்பு செய்தது போல் அவரையும், பழனிசாமியையும் மதிப்பிழக்கச் செய்ய வேண்டியது அவசியம்.

  "மோடி தான் எங்கள் டாடி" ராஜேந்திர பாலாஜியை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின் | Rajenthra Bhalaji Udhayanidhi Stalin Modi

ஜெயலலிதா இருந்தபோது மோடியா? இந்த லேடியா? என்றார். ஆனால், மோடிதான் எங்கள் டாடி என்கிறார் அமைச்சர் ராஜேந்திபாலாஜி. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும். கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4,000 வழங்கப்படும். நீட் தேர்வு காரணமாக அனிதா உயிரிழந்தார்.

அவர் மட்டுமல்ல தொடர்ந்து 14 மாணவ, மாணவிகள் உயிரிழந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். ஆகவே அனைவரும் திமுகவுக்கு ஓட்டு போடுங்க என்று பிரச்சாரத்தில் பேசினார்.