தமிழகத்தில் பாஜக வளர்ந்த கட்சியாகிவிட்டது, மோடியைக் கண்டு உலக நாடுகள் பயப்படுகிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் பாஜக வளர்ந்த கட்சியாகிவிட்டது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார். விருதுநகரில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “தமிழகத்தில் பாஜக தற்போது வளர்ந்த கட்சியாக மாறிவிட்டது. டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளே பயப்படும் அளவுக்கு பலம் வாய்ந்தவராக உள்ளார்.
வல்லரசு நாடுகள் அவரைக் கண்டு பயப்படுகின்றன. எல்லா இடங்களிலும் பிரதமர் மோடி குறித்துப் பேசினால் மகிழ்ச்சி அடைவார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் மோடி உதவி செய்வார்.
அதிமுக அறிவித்த திட்டங்களையும் அவர் கட்டாயம் நிறைவேற்றுவார். நான் ராஜபாளையம் தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறேன். அங்கு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்று பேசினார்.