தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்

Tamil nadu Draupadi Murmu
By Yashini Oct 13, 2026 06:55 AM GMT
Report

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

முழுநேர ஆளுநராக நியமனம்

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி செயல்பட்டு வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 6 மாதங்களாக தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் செயல்பட்டு வந்தார்.

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் | Rajendra Vishwanath Arlekar Appoint Governor Of Tn

இந்நிலையில், அவர் கேரள ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, சிக்கிம் ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறப்பித்துள்ளார்.