தேமுதிகவின் ஒரே ஸ்டார் வேட்பாளர் இவர் தான்..யார் தெரியுமா?
தேமுதிக சார்பில் போட்டியிடும் ஒரே ஸ்டார் வேட்பாளர் ராஜேந்திரநாத். கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஏதாவது ஒரு தொகுதியில், சினிமா நட்சத்திரம் போட்டியிட வாய்ப்பு அளித்து வந்தனர்.
ராமராஜன், சரத்குமார், கருணாஸ் போன்றவர்கள் அப்படி வந்தவர்கள்.இந்த தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., பட்டியலில் சினிமா நட்சத்திரங்களை காணோம். பா.ஜ., சார்பில் குஷ்பு போட்டியிடுகிறார்.தே.மு.தி.க., சார்பில் ஆலங்குளத்தில் போட்டியிடும் நட்சத்திரம் ராஜேந்திரநாத்,55. விஜயகாந்தின் நீண்டகால ரசிகர்.
முறுக்கு மீசையுடன் இன்ஸ்பெக்டர், போலீஸ் அதிகாரி வேடத்திற்கு பொருத்தமானவர். 215 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.ரஜினியுடன், அண்ணாத்தே உட்பட, ஏழு படங்களில் நடித்து வருகிறார். பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர், பட விநியோகஸ்தர், ஒளிப்பதிவாளர், சினிமா தயாரிப்பாளர் என, பன்முகம் உடையவர்.சொந்த ஊர், திருநெல்வேலி முக்கூடல்.