தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்- ராஜேந்திர பாலாஜி
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசினார்.
அவர் பேசியதாவது..,
மார்ச் 6ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால் முன்கூட்டியே சனிபகவானை தரிசிக்க வந்ததாக கூறினார்.
மேலும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளதாக தெரிவித்தார்.

அதற்கான பேச்சு தமிழகத்திலும் புதுவையிலும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அற்புதமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் செல்கிறது என்று கூறினார்.
தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் அவர் கூறினார்.