‘‘தீபாவளிக்கு ஒன்றரை டன் ஸ்வீட் பாரசல் ’’ : சிக்கலில் முன்னாள் அமைச்சர்!
முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் சுமாா் ஒன்றரை டன் ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாகக் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு போதிய ஆதாரம் உள்ளது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
சேலத்தில் அமைச்சா் சா.மு.நாசா். செய்தியாளா்களை சந்தித்த போது தமிழகத்தில் பால் உற்பத்தி, விற்பனை 1.50 லட்சம் லிட்டா் அதிகரித்துள்ளதாக கூறினார்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆவின் ஊழியா்கள் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் சுமாா் ஒன்றரை டன் ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு போதிய ஆதாரம் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் கூறினார்.