லூசுத்தனமாக பேசுகிறார்கள்: தவெக-வை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர்
மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு பெரிய கட்சியெல்லாம் தவெக இல்லை என்று கூறி அருண்ராஜ் குற்றச்சாட்டுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடிக் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் விருதுநகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
தவெகவிற்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருள்ராஜ் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு பெரிய கட்சியெல்லாம் இல்லை.

அவன் (அருண்ராஜ்) கிடக்கிறான் லூசு பய, திமுகவுக்கும், தவெகவிற்கு போட்டி என தவெகாவினர் லூசுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள், பெரிய கட்சியை எதிர்த்து போராடுவது போல் காட்டிக்கொண்டால் தவெகவை மக்கள் மதித்துவிடுவார்களா?.
தவெகவில் யார் இருக்கா அங்கு, ஒரு நாள் கூத்திற்கு தாங்குமா தவெக ஒரே நாளில் இடத்தை காலி செய்து விட்டு ஓடி விடுவார்கள். அதிமுக எவ்வளவு பெரிய பலம் கொண்ட கட்சி, எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கி எடப்பாடி பழனிச்சாமி கையில் அற்புதமாக இருக்கும் கட்சி அதிமுக
.எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களில் இருக்கக்கூடிய அத்தனை அத்தனை பேரும் வீர வால்கள், போர் வால்கள். அதிமுகவை எதிர்க்கின்ற துணிச்சல் திமுகவிற்கு மட்டுமே உள்ளது, வேறு கட்சிக்கு கிடையாது தவெக களத்திலேயே கிடையாது என்றார்.