அதிமுகவில் இணையும் நடிகர் தனுஷ்? முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்

Dhanush ADMK
By Karthikraja Oct 17, 2026 02:06 PM GMT
Report

rajendra balaji react to actor dhanush join in admk: நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.

அதிமுகவில் இணையும் நடிகர் தனுஷ்?

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர உள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 

அதிமுகவில் இணையும் நடிகர் தனுஷ்? முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் | Rajendra Balaji React To Dhanush Join In Admk

அதை உறுதிப்படுத்தும் வகையில், தனுஷ் ரசிகர்கள் மன்றத்தை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து, உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தல் வழங்கினார். அதைத்தொடர்ந்து, ரசிகர்கள் மன்றத்தை, தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றினார்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தனுஷ் அதிமுகவில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ”அதிமுகவுக்கு யார் வந்தாலும் அவர்களை அன்போடு இணைத்துக் கொள்ளும் உயர்ந்த அரசியல் பக்குவம் கொண்ட தலைவராகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். 

அதிமுகவில் இணையும் நடிகர் தனுஷ்? முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் | Rajendra Balaji React To Dhanush Join In Admk

கட்சியின் கொள்கைகளுக்கும் வளர்ச்சிக்கும் பயன்படக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களை எடப்பாடியார் நிச்சயமாக இணைத்துக் கொள்வார். இவர் வரலாம், அவர் வரக்கூடாது என்று யாரையும் பிரித்துப் பார்க்கும் வழக்கம் அதிமுகவில் கிடையாது.

தனுஷ் ஒரு முன்னணி நடிகர். இன்றைக்கு ஏழை எளிய மக்கள் இளைஞர்கள் மத்தியில் தனுஷ் என்று சொன்னால் அது ஒரு தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. அவரைப் போன்று நடிகர்கள் எங்கள் இயக்கத்திற்கு வந்தால் அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்காமல் என்ன செய்வோம்?

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் அரசியலுக்கு வந்துவிட்டு நடிக்க கூடாது. இன்று சிலர் படத்திலும் நடிக்கிறார்கள், அரசியலிலும் நடிக்கிறார்கள். அதேசமயம் நீங்கள் கேட்கின்ற கேள்வி உண்மையா அல்லது வதந்தியா என்பதை காலம்தான் சொல்லும்" என கூறினார்.