முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் ; உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

supreme court bail granted rajendra balaji madras high court
By Swetha Subash Jan 12, 2022 10:10 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.3 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியானது.

இதனைத்தொடர்ந்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படைகள் அமைத்துதேடி வந்தனர்.

தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த காவல் துறையினர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமானநிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே பலர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்துவந்தனர். தொடர்ந்து காவல் துறைக்கு டிமிக்கி கொடுத்து வந்த ராஜேந்திர பாலாஜி, ஜனவரி 5-ம் தேதி கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு 15 நாட்கள் (ஜனவரி 20 வரை ) நீதிமன்றக்காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி சென்னை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடரப்பட்ட இடத்தில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவில் உள்ள சிறைச்சாலையில் ராஜேந்திர பாலாஜி ஏன் அடைக்கப்பட வேண்டும் என்றும்,

மேலும் அவரை கைது செய்த விதம் குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து தமிழக அரசு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தை ஒருதலைப்பட்சமாக நீதிபதிகள் அணுகக்கூடாது என்று வாதிட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ஒருதலைப்பட்சமாக அணுகியிருந்தால் கடந்த வாரமே அவருக்கு ரிலீப் கொடுத்திருப்போம் என்று தெரிவித்தது.

பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், வெளியூர் செல்லக்கூடாது என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.