திருப்பதிக்கு நெய் அனுப்பியதில் நடந்த முறைகேடு - ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா?

tirupati ghee rajendra balaji
By Nandhini Dec 29, 2021 04:04 AM GMT
Report

போலீஸ் விசாரணை மதுரை ஆவினிலிருந்து திருப்பதிக்கு நெய் அனுப்பியதில் நடைபெற்ற முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கி இருக்கிறது. முன்னதாக திருப்பதியில் லட்டு தயாரிக்க அனுப்பப்படும் நெய் தொடர்பான விவரங்கள் பதிவேட்டில் இடம்பெறாதது கடந்த மே மாதம் தெரிய வந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் 5 பேர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை தொடங்கி இருக்கிறது. முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏற்கெனவே ரூ.3 கோடி பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பதிக்கு நெய் அனுப்பியதில் நடந்த முறைகேடு - ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா? | Rajendra Balaji Ghee Tirupati