நடுநிலையாக இருந்துவிட்டு போகிறேன்: டி.ராஜேந்தர் பரபரப்பு அறிக்கை

politics tamilnadu statement rajendar
By Jon Mar 27, 2021 11:16 AM GMT
Report

காலமும் சரியில்லை, களமும் சரியில்லை, வரும் தேர்தலில் நடுநிலையாக இருக்க விரும்புவதாக இலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் யாருக்கும் ஆதரவும் இல்லை என டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம் என்னை அழைத்தார், நான் மரியாதையை நிமித்தமாக சந்தித்து, கையில் பூங்கொத்து ஒன்று கொடுத்து விடைபெற்றேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் அதிமுக சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல் களம் என்றும் அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தலும் இதுதான்.

இரு கட்சிகளுக்கும் அவரவர் பலம் இருக்கிறது. இதைத்தவிர பக்கபலமாக கூட்டணி அமைத்துள்ளார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கான பலப்பரீட்சை, இதில் நான் போய் என்ன செய்ய போகிறேன். எனது வார்த்தையில்உண்மை, தன்மை இருப்பதை வைத்து சில முன்னாள் முதல்வர்கள் ஒருகாலம் என்னை பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள்.

கொள்கை சொல்லி ஓட்டு கேட்டது எல்லாம் அந்த காலம், கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கி கொள்ளலாம் என்பது இந்த காலம். காலமும் சரியில்லை, களமும் சரியில்லை, ஆகையால், கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று என்று முடிவெடுத்து விட்டேன். ஆகவே, யாரையும் ஆதரிக்கவும் இல்லை, அரவணைக்கவும் இல்லை. நடுநிலையோடு இருக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.


GalleryGallery