இவர் எங்க போட்டியிட்டாலும் தோல்வி தான்: அமமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ பேட்டி
edappadi
aiadmk
Rajavarman
By Jon
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 171 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது. இதில் தற்போதைய அமைச்சர்கள் உட்பட எம்எல்ஏக்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த எம்எல்ஏ ராஜவர்மன் இன்று அமமுகவில் இணைந்து கொண்டார்.
சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வியடைவார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எம்எல்ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.